
லிட்ரோ மற்றும் லாஃப் சமயல் எரிவாயுக்களின் விலைகள் நேற்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு 775 ரூபாவாக உயர்த்தப்பட்டு, புதிய விலை 4,765 ரூவாவாக விற்பனை செய்யப்படுகிறது.
5 கிலோ கிராம் எரிவாயு 308 ரூபாவால் உயர்த்தப்பட்டு, 1,910 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
2.3 கிலோ கிராம் எரிவாயு 140 ரூபாவாக உயர்த்தப்பட்டு 890 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு 1,070 ரூபாவால் உயர்த்தப்பட்டு, 5,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு 428 ரூபாவால் உயர்த்தப்பட்டு,2,280 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், ஏப்ரல் மாதத்திற்கான 14 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு வந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது
மேலும், இந்த மாதத்திற்குள் கூடுதலாக 23 ஆயிரத்து 100 மெற்றிக் தொன் எரிவாயு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 7 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஏற்கனவே வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தைக்கான எரிவாயு விநியோகம் நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


