
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
மர்தான் மாவட்டத்தின் பிரதான வீதியொன்றில் இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து ஒன்று வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அதே வீதி வழியாக வேகமாகப் பயணித்த மற்றொரு பேருந்து, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு,
ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

Follow Us



