இலங்கைஉலகம்
Trending

பேத்தியை முன்பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா விபத்தில் பலி!

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, சிறுமி காயமடைந்துள்ளார்.

மாத்தளை கிளையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த லாப் சமையல் எரிவாயு சிலின்டர்களை ஏற்றிச்சென்ற லொறியின் சில்லில் சிக்குண்டே வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

உக்குவளை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய வயதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உக்குவளையில் இருந்து மாத்தளையிலுள்ள பாலர் பாடசாலைக்கு தனது பேத்தியை அழைத்துச் சென்ற வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்த சிறுமி
மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button