
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று அதிகாலை (30) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் தீ விபத்து இடம்பெற்றதால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Follow Us



