
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை பகுதியில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்கு செல்வதாக கூறி, விகாரை பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அதனை அவதானித்த பொலிஸார் இருவரையும் கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Follow Us



