
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு மே மாதம் 30 ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஏற்பாட்டுக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
1976 ஆம் ஆண்டு ஈழத் தமிழினத்தின் வரலாற்று இறைமை அடிப்படையில், அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது.
ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னரும், அதன் அடிப்படை கோரிக்கைகளும் கொள்கைகளுமே தமிழின விடுதலை பாதையின் அடிநாதமாகவும், அடித்தளமாகவும் உள்ளது.
இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் ஊடக சந்திப்பில், தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை அ.அகஸ்ரின் அடிகளார்,
அருட்பணி க.ஜெகதாஸ் மற்றும் க.இதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



