
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணும், சிறுவர்கள் இருவருமாக மூவரும் உறவினர் வீட்டிற்கு பயணித்த வேளையிலேயை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட சிறுவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us



