இலங்கைஉலகம்
Trending

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

வெசாக் தினத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பின்படி, சித்திரை புத்தாண்டு கால அட்டவணைக்கு அமைவாக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு கோட்டையை மையமாகக் கொண்டு அனைத்து மாகாணங்களையும் இணைக்கும் வகையில் விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் வலயங்களை மையப்படுத்தியும் மேலதிக சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல விசேட தொடருந்து சேவைகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெசாக் பண்டிகை காலத்தில் பயணிக்கும் பொதுமக்கள் முன்கூட்டியே பயண திட்டங்களைத் தயாரித்து, பாதுகாப்பாக பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button