இலங்கை
Trending

முதலை மற்றும் மலைப்பாம்புத் தோல்கள் கடத்தல்: விமான நிலையத்தில் ஒருவர் கைது!

உலர்த்தப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட விலங்குத் தோல்களுடன் நபரொருவர் நேற்று(11) கட்டுநாயக்க விமான நிலையத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.

‎சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‎வர்த்தகர்களுக்கான ‘சிவப்பு வழித்தடம்’ (Red Channel) ஊடாக இந்தத் தோல்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோதே அவர் கைதாகியுள்ளார்.

‎பணப்பைகள் தயாரிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட முதலைகள், மலைப்பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வனவற்றின் 19 தோல் பகுதிகள் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

‎குறித்த நபர் வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் கட்டளைச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் தொடர்பான ஏனைய சட்டவிதிமுறைகளை மீறி இந்தத் தோல்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

‎கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடைய குறித்த வர்த்தகர், தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இவற்றைத் தனது பயணப் பொதிகளில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.

‎சுங்க அதிகாரிகளிடம் இவை ‘ஆடைகள்’ எனக் கூறி அவர்களை திசைதிருப்ப அவர் முயற்சித்துள்ளார்.

‎இருப்பினும், அதிகாரிகள் அவரது பயணப் பொதிகளை நுணுக்கமாகப் பரிசோதித்ததில் இந்தத் தோல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button