Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
இலங்கைவடக்கு மாகாணம்
Trending

சிறு முயற்சியாகர்களை ஊக்குவிக்க விசேட விருது – கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு!

கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாகர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சம்மேகத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று(16) இடம்பெற்றது.

இது குறித்து குழுவினர் மேலும் கூறுகையில் –

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

எதிர்வரும் மே மாதம் 22 திகதியன்று யாழ் “ஜெ தனியார் விருந்தினர் விடுதியில்” குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வர்த்தகம், விவசாயம், கடற்றொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்துறை சார் வர்த்தக பொருளாதார துறையில் இருக்கும் முயற்சியாளர்களை இனங்கண்டு குறித்த விருது வழங்கப்படுகின்றது.

கடந்த வருடம் யாழ்ப்பாணம் மட்டக்கப்பு திருகோணமலை இருந்தது.

ஆனால் இம்முறை அது சற்று விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

அதன்படி இம்முறை மன்னார் புத்தளம் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களும் இம்முறை விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பாக பெண்களின் திறமைகள் அவர்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வழிசெய்கின்றோம்.

உற்பத்தியாகர்கள், சுற்றுலா துறைசார் முயற்சியாளர்ககும் இதில் முக்கிய இடம் பெறுவர்.

சிறிய நடுத்தர வர்த்தக மற்றும் முயற்சியாளர்கள் இதில் தமது கலந்துகொண்டு தமது முயற்சிகளை உலகுக்கு கொண்டுசெல்ல முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் தமது முயற்சிகளை அடையாளப்படுத்தி விண்ணப்பங்களை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் ஆளுநர், மாவட்ட செயலர், பிரதேச செயலர் ஊடாக முழுமையான உறுதிப்படுத்தலுடன் எமக்கு விண்பப்பிக்க முடியும். அத்துடன் மாச் 31 திகதியன்று விண்ணபிக்கும் இறுதி தினமாகும்.

அத்துடன் மே 22 அன்று விருது வழங்கும் நிகழ்வு நடைறும்.

இதில் அனைத்து தர நிலையிலும் இருக்கும் முயற்சியாளகர்களும் இணைந்து கொள்ள முடியும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு 20 முயற்சியாகர்கள் விருதுகளை பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு அது 25 முதல் 30 வரையானோர் பெறும் வகையில் விருது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button