இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்தது யாழ்.மாநகரசபை!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு, யாழ் மாநகர சபையில் இன்று(14) இடம் பெற்றது.

யாழ் மாநகர சபையின் அமர்வு முதல்வர் திருமதி வி. மதிவதனி தலைமையில் ஆரம்பமாகியது.

அமர்வு ஆரம்பமாக முன்னதாக முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்கள் நினைவு கூரப்பட்டார்கள்.

சபா மண்டபத்தில் வைக்கப்பட்ட நினைவு படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில், ஈ.பி.டி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் தவிர ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button