இந்தியாஉலகம்விளையாட்டு
Trending

T20 சூப்பர் 8 போட்டியில், சிம்பாவேயை வென்ற இந்தியா

சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண 48 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 8 ஆவது போட்டியில், இந்திய அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்றிரவு(26) நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டைகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா (Abhishek sharma) 30 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார்.

257 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய சிம்பாவே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

சிம்பாவே அணி சார்பாக (Brain bennelt) 59 பந்துகளில், 97 ஓட்டங்களை பெற்றார்.

அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர் ஹார்த்திக் பாண்டியா (Hardik pandiya) ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button