
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்றிரவு (28) நடைபெற்ற T20 உலகக் கிண்ண 49 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 9 ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் நேற்றிரவு(27) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதற்கமைய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பாக (Glenn Philips) பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றார்.
160 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணி19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பாக (Tom Banton) 24 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார்.
அதிரடியாக விளையாடிய (Will Jackes) ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.



