இலங்கை
Trending

வடக்கு மாகாண நியதிச் சட்டங்களுக்கு முரணாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுற்றுநிருபம்: சபையில் குற்றச்சாட்டு:அதை நிராகரிக்கவும் தீர்மானம்!

யாழ்.சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வடக்கு மாகாண சபை நியதிச் சட்டங்களுக்கு முரணாக நகரசபைக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் முன்வைத்தார்.

வடக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், செயலாளர்கள் ஊடாக இவ்வாறான விடயங்களை கையாள முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனையடுத்து குறித்த சுற்று நிருபத்தில் வடக்கு மாகாண நியதிச் சட்டத்தில் இல்லாத விடயங்களை நிராகரிப்பதாக உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button