இந்தியாஉலகம்மங்கையர் அரங்கம்
Trending

இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக திகழ்ந்தவர் பானு அதையா!

இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக திகழ்ந்தவர் பானு அதையா ஆவார்.

பானு அதையா, 1983 இல் காந்தி படத்திற்காக ஒஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை பெற்றவர்.

குரு தத், ராஜ்கபூர் போன்ற இயக்குநர்களுடன் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.

கோலாப்பூரில் பிறந்த இவர் மும்பையில் கலை பயின்று,ஆடை வடிவமைப்பில் புதிய உத்திகளை கையாண்டார்.

பானு அதையா,1929 ஆண்டு ஏப்ரல் 28 இல் கோலாப்பூரில் பிறந்தார்.பாம்பே புரோகிரசில் ஆர்ட்டிஸ்ட் குரூப்பில் இடம்பெற்ற ஒரே பெண் கலைஞராகவும் திகழ்ந்தார்.

குரு தத்தின் சி.ஐ.டி திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார்.

1982 இல் வெளியான காந்தி திரைப்படத்தின் மூலம் 1983 இல் ஆஸ்கார் விருது பெற்றார்.

வரலாற்றுப் படங்களுக்கு துல்லியமான உடைகளை வடிவமைப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.

“லகான்” படத்திற்காக குஜராத்தின் கிராமப்புற உடைகளை,காதி துணிகளை பயன்படுத்தி தத்ரூபமாக வடிவமைத்தார்.

பானு அதையா, 2020 ஒக்டோபர் 15 அன்று தனது 91 வயதில் காலமானார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button