
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படும் பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளதாக
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ.செந்தூரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக மையத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துரைத்த அவர்,”குறித்த தொடரில் 6 அணிகள் பங்குபெற்றுவதற்காக 170 க்கும் மேற்பட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
இந்த நிலையில், இன்னும் மூன்று அணிகளுக்கான உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
ஆவரங்கால், அச்சுவேலி, புத்தூர் அரியாலை, நீர்வேலி ,வடமராட்சி வலிகாமம் மற்றும் தீவகம் ஆகிய அணிகள் சார்பாக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்”- என்றார்.

Follow Us



