இலங்கை
Trending

குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்!

குவைத்திலுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரானின் தானியங்கி விமானங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

நாட்டின் இரண்டு பிரதான மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு மையங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜோஹர் ஹயாத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக தொழிற்சாலைகளுக்கு கடுமையான பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு மின் உற்பத்தி அலகுகள் முற்றாகச் செயலிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத்தின் முக்கிய பொதுக் கட்டமைப்புகளைக் குறிவைத்து அண்மைக்காலமாக இவ்வாறான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக நடத்தப்பட்ட தானியங்கி விமானத் தாக்குதலில் ஷுவைக் எண்ணெய் துறை வளாகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியச் சேவைகளைப் பராமரிப்பது குறித்தும் குவைத் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button