இலங்கை
Trending

மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஏப்பிரலில் அறிவிக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும்,

அது குறித்த இறுதி முடிவு ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் எனவும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button