
யாழ்.சாவகச்சேரி நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்தது.
இந்த நிலையில், சாவகச்சேரி பொலிஸாரும், கிராம மக்கள் இணைந்து நேற்றிரவு(08) அதனைப் பிடித்ததுள்ளனர்.
அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்கள் சருகு புலியை பாதுகாப்பாக கொண்டுசென்றுள்ளனர்.

Follow Us



