Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்விளையாட்டு
Trending

‘வடக்கின் போர்’ கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற “வடக்கின் போர்” கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது.

யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் (05) ஆரம்பமான வடக்கின் போர் கிரிக்கெட் தொடரில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கு அமைய தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடிப்படுத்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி, 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸ் காக துடிப்படுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் துடிப்படுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி 64.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

பதிலுக்கு 2ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்படுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 53.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதற்கமைய யாழ்.மத்திய கல்லூரி அணி 3 விக்கட்களால் வெற்றிபெற்றுள்ளது.

மேலும், இரு அணிகளுக்குமிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டி எதிர்வரும் 14 ஆம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வரலாற்று பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் கிரிக்கெட் தொடர், 1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை இடம்பெற்ற 119 போட்டிகளில் சென் ஜோன்ஸ் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 31 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

40 போட்டிகள் வெற்றி தோல்விகள் இன்றி நிறைவடை ந்தன.

7 போட்டிகளுக்கான முடிவு கிடைக்கப் பெறவில்லை என்பதும், ஒரு போட்டி இடைநடுவில் கைவிடப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video