Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்சுவிஸ்
Trending

சூரிச் விமான நிலையம் மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக தேர்வு!

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையம் தொடர்ச்சியாக மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக தெரிவாகியுள்ளது.

அதற்கமைய, ஆண்டுதோறும் வழங்கப்படும் Airport Service Quality விருது சூரிச் விமான நிலையத்திற்கு கிடைத்துள்ளது.

2.5 கோடி முதல் 4 கோடி பயணிகள் வருகை தரும் ஐரோப்பிய விமான நிலையங்களின் பிரிவில் சூரிச் விமான நிலையம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதை 2018 ஆம் ஆண்டு முதல் சூரிச் விமான நிலையம் இடையறாது தக்கவைத்து வருகிறது.

இந்த விருதானது பயணிகளோடு நடத்தப்படும் நேர்காணல்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

விமான நிலையத்தின் கட்டமைப்பு வசதிகள், உணவகங்கள் மற்றும் விற்பனை மையங்களின் தரம், சுகாதார தரநிலைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button