உலகம்
Trending

உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!

உக்ரைனின் பாவ்லோஹ்ராட் நகரிலுள்ள வணிக வளாகமொன்றின் மீது ரஷ்யா நடாத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் வணிக வளாகம், பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button