
பிரித்தானியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் Mr Bean என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன், காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
காசாவில் வாழும் இரண்டு மில்லியன் மக்கள் மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளதை எண்ணி தான் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அங்குள்ள பொதுமக்களுக்கான மின்சாரம், குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் துணைபோகும் பிரித்தானிய அரசின் வெளியுறவுக் கொள்கையை அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தடைகள் மனித உரிமை மீறல்கள் என அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
Follow Us



