
ஜப்பானின் வட கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (20) பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து நாட்டின் பல மாகாணங்களுக்கும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இவாட் (Iwate), அமோரி (Aomori) மற்றும் ஹொக்கைடோ (Hokkaido) ஆகிய மாகாணங்களின் கடற்கரைப் பகுதிகளுக்கு 3 மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களில் தஞ்சம்புகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடலில் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் இது ‘அப்பர் 5’ எனப் பதிவாகியுள்ளது.




