உலகம்விளையாட்டு
Trending

சிட்டிங் கரப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா மகளிர் அணி வெற்றி!

உலக சிட்டிங் கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் தொடரில், கனடா மகளிர் அணி ஜப்பானை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 25-17, 25-20, 25-16 என்ற செட் கணக்கில் கனடா ஆதிக்கம் செலுத்தியது.

அணித்தலைவி ஹைடி பீட்டர்ஸ் 29 புள்ளிகளைப் பெற்று ஆட்டநாயகி செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் கனடா மகளிர் அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து, காலிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளத் தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை, ஆண்கள் பிரிவில் நடைபெற்ற கரப்பந்தாட்ட கடைசி தகுதி சுற்றுப் போட்டியில் கனடா அணி 3-1 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button