
அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் இந்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சவூதி அணுசக்தித் திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு “பெரிய அளவிலான அணுசக்தி ஒத்துழைப்பு வழங்கும் ஒப்பந்தம் இதுவாகும்.
இந்த ஒப்பந்தமானது “அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்” மற்றும் “இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்” ஆகிய இரண்டு உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தற்போது மதிப்பாய்வுக்காக அமெரிக்க காங்கிரஸுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Follow Us



