இலங்கைஉலகம்மலையகம்
Trending

நுவரெலியாவில் நிலவும் குளிரான காலநிலை: உறைபனிப் பொழிவு!

நுவரெலியாவில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்றைய தினமும்(24) பல இடங்களில் உறைபனி பொழிந்துள்ளது.

நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா வானிலை மையத்தில் 7.8 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் இந்த பனிமூட்ட நிலைமை அதிகமாகக் காணப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாகவும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button