Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் பங்குனித் திங்கள் உற்சவம்!

ஈழத்தின் புகழ் பூத்த கண்ணகை அம்மன் ஆலயங்களில் ஒன்றாகிய யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய முதலாவது பங்குனி திங்கள் உற்சவம் இன்று(16) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கண்ணகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பக்தர்கள் விரதம் இருந்து, பொங்கல் பொங்கி, பாற்குடம் மற்றும் காவடிகள் எடுத்து, தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற திங்கள் கிழமைகள் கண்ணகி அம்மனுக்குரிய சிறப்பான நாட்களாக கருதப்படுகிறன.

இந்த நாட்களில் பெண்கள்,திருமண பாக்கியம் வேண்டியும், கணவன் மனைவி உறவு சிறக்க வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும் விரதமிருந்து கண்ணகி அம்மனின் அருளைப் பெறுவர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button