இலங்கைவடக்கு மாகாணம்

தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் தீ வைப்பு!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது அதிகாலையில்(14) பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும், கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்திற்கே தீ வைக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் வாயில் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் இருவர் பெற்றோல் ஊற்றித் தீ வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீயால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button