Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

விளையாட்டு
Trending

T20, இறுதிப் போட்டியில் இந்திய - நியூசிலாந்து அணிகள் களத்தில்!

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் இன்று(08) மோதவுள்ளன.

இந்தப்போட்டி முப்பாய் வான்கடே மைதானத்தில் இன்றிரவு 6.30 மணியவில் ஆரம்பமாகவுள்ளது.

அரை இறுதியில், தென் ஆபிரிக்காவை எதிர்த்து அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தற்போதைய சாம்பியனும், போட்டியின் ஏற்பாளர்களுமான இந்தியாவை இந்தப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

குழு D இல் கடினமான போட்டிகளை எதிர்கொண்டு முன்னேறிய நியூசிலாந்து, சூப்பர் 8 போட்டிகளில், குழு 2 இல் பாகிஸ்தானை நிகர ஓட்ட வீதத்தில் வென்றது.

அதனைத் தொடர்ந்து அரைஇறுதியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்து அவர்கள் செய்த அதிரடியான ‘ரன் சேஸ்’ அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இந்தியா, சூப்பர் 8 இல் தென் ஆபிரிக்காவிடம் மட்டுமே தோல்வி அடைந்தது.

அதன் பின்னர் அவர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் இந்தியாவின் அதிரடியான துடுப்பாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பான தாக அமையவுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button