உலகம்
Trending

வடகொரிய நாடாளுமன்றத்தை முழுமையாக கைப்பற்றிய கிம் ஜாங் உன்!

வட கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி “கிம் ஜாங் உன்” அபார வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97 வீத வாக்குகளை பெற்றதோடு, அனைத்து இடங்களையும் கைப்பற்றி நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் சாதனை படைத்துள்ளன.

ஆளும் கூட்டணி கட்சிகள் 687 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 99.99 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 0.00003 வீதம் வாக்குகளே செலுத்தப்படாத வாக்குகளாக காணப்படுகின்றன.

99.93 வீதமான வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக காணப்படுகின்றன.

0.07 வீதமான வாக்குகள் ஆளும் கட்சிக்கு எதிராக ஏனைய கட்சிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இந்த எதிர்ப்பு வாக்கு வீதமானது இணையத்தில் கிண்டலாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

வட கொரிய நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கு எண்ணலைத் தொடர்ந்து தேர்தல் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button