உலகம்
Trending

சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!

யேமனின் மஃரிப் பகுதியில் சவூதி அரேபியாவின் போர் விமானம் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பு உரிமை கோரியுள்ளது.

இந்த நிலைமையில், பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) கடல் வழிப்பாதைக்கு அருகில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

மஃரிப் வான்வெளியில் தாக்குதல் நடாத்திய சவூதியின் F-15 போர் விமானத்தை உள்நாட்டில் தயாரித்த ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா (Yahya Saree) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சவூதி அரோபியா இதனை உறுதிப்படுத்தி இன்னும் அறிவிக்கவில்லை.

இதுவரைக் காலமும், சவூதி அரேபியா மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசு ஆகியவற்றின் மிகப்பெரிய பலமாக வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே இருந்தன.

எனினும் ஹூதிகளால் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடிந்தால், அது போரின் சமநிலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா மீது நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்றும், நம்பிக்கையைப் பெற நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.

ஈரானின் நிபந்தனைகள் ஏற்கும் வரை அமெரிக்காவுடான பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button