உலகம்
Trending

450

துருக்கியின் மனிசா (Manisa) மாகாணத்திலுள்ள தொழிற்கல்வி பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 15 வயதுடைய சந்தேகநபரான மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மனிசா மாகாணத்தின் ‘இன்சி உஸ்மேஸ்’ (Inci Uzmez) தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப உயர்நிலைப் பாடசாலைக்கு இன்று(22) காலை வெளியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், காயமடைந்த அனைவரும் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் உரிமையாளரான சந்தேகநபரின் பாட்டன், மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button