உலகம்குற்றவியல்
Trending

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சி முயற்சிக்கான கிளர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சியோல் மத்திய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதேவேளை, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஹான் டக் சூவுக்கு, இராணுவ ஆட்சி அறிவிப்பை அமைச்சரவை கூட்டத்தின் மூலம் சட்டபூர்வமாக்க முயன்றமை, அவனைப் தவறாகப் பதிவு செய்தமை மற்றும் சத்தியப் பிரமாணத்தின் கீழ் பொய் கூறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் யோங் ஹியூனுக்கு, தோல்வியடைந்த இராணுவ ஆட்சி முயற்சியில் வகித்த பங்கிற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்து நீதிமன்ற முன்றலில் கூடிய அவரது ஆதரவாளர்களுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button