
பிரித்தானியா – லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை (23) இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உட்பட மூன்று பேர் பயணித்த கார், மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சவுத் ஹாரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us



