உலகம்
Trending

மொஸ்கோ உணவகத்தில் சக்திவாய்ந்த வெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு,21 பேர் காயமடைந்துள்ளனர்.

மொஸ்கோ நகருக்கு அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள இத்தாலிய உணவகத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக

ரஷ்ய நேரப்படி நேற்றிரவு(01) 8.00 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருளை கொண்டு வந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைஎ,ய முயன்றுள்ளார்.

அவரை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாக ரஷ்யாவின்
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்போது வெடிபொருள் வெடித்ததில்,குறித்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது உணவகத்தில் தனியார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், தாக்குதலின் இலக்கு யார் என்பது தொடர்பிலும் இதுவரை தெரியவரவில்லை என தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button