
தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை ஸ்தாபிக்கும் நிகழ்வு யாழ் ஊர்காவற்றுறை எழுவைதீவில் இன்று(16) இடம் பெற்றது.
எழுவைதீவு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்,


யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், ஊர்காவற்றுறை கண்ணகை இறங்குதுறையின் புனர்நிர்மாணப்பணிகளையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

Follow Us



