இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

பளை – மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் நேற்று (12) 23 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
பளை இராணுவ அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் சோரன்பற்று காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிலோ 550 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பளை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button