இலங்கை
Trending

அரச தொலைக்காட்சி முன்னாள் தலைவர், பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா இன்று கைது செய்யப்பட்டனர்.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரச தொலைக்காட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் தொகுதிக்கு வெளியே ஆறு ஊழியர்களை நியமித்ததாகவும்,

அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பணியாளர்களாக நியமித்து, அதற்கான ஊதியத்தை அரச தொலைக்காட்சி நிறுவனத்திடம் பெற்றதாகவும்,

இதன்மூலம் அரசாங்கத்திற்கு 14.32 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button