உலகம்
Trending

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டால், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எரிசக்தி வலையமைப்புகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அதற்கு பதிலடியாகவே ஈரானின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

இதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும், பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடனும் அவசர தொலைபேசி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளிலுள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார விநியோகக் கட்டமைப்புகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் ஆகியன இலக்காக அமையும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுக்க ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும், பேச்சுவார்த்தை மூலமே பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும் எனவும் வளைகுடா நாடுகளிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தொடர்புகொண்டு, இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button