Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

சாரணர்களின் பொங்கல் விழாவும்,விளையாட்டும்!

கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் தைப்பொங்கல் விழா யா/சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று(25) சிறப்பாக இடம்பெற்றது. Click video…….

சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட ஆணையாளர் சி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில், கிளிநொச்சி வடக்கு வலய சாரணர்கள், கிளிநொச்சி தெற்கு வலய சாரணர்கள் மற்றும் தென்மராட்சி வலய சாரணர்கள் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் விருந்தினர்களாக தென்மராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் சு.ஸ்ரீகுமரன், தமிழ் இணையக் கல்விக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன், இலங்கை வங்கியின் சாவகச்சேரி கிளை முகாமையாளர் த. கபிலன், சாவகச்சேரி டிறிபோர்க் கல்லூரி அதிபர் ஐ.தேவஈஸ்வரன், சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன், ஓய்வு நிலை அதிபர்களான செ.பேரின்பநாதன், அ.கைலாயபிள்ளை ஆகியோரும்,

பிரெஞ்சு மொழி விரிவுரையாளரும், பாரதி இன்ஸ்ரிரியூட் இயக்குநருமான திருமதி துஷ்யந்தி ரஜனிகாந்தன், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான மு.கோகுலராஜ், தி.சசிகரன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில், உறியடித்தல், கயிறு இழுத்தல், கொம்பு வைத்தல், சமநிலை ஓட்டம், சங்கீதக்கதிரை ஆகிய விளையாட்டுக்களும், பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video