Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

எதிர்வரும் வாரம் முதல் வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து அநாவசிய எரிபொருள் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை!

எதிர்வரும் வாரம் முதல் வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து அநாவசிய எரிபொருள் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதன்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து அதன் மூலம் அநாவசிய போக்குவரத்து செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் உலக மசகு எண்ணை விலையுயர்வுக்கும், தட்டுப்பாட்டுக்கும் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், எதிர்வரும் மே மாத முற்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், சமையல் எரிவாயு மே மாத முடிவு வரை கையிருப்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

37 நாட்களுக்கு மேல் எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி இலங்கையிடம் இல்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது குறிப்பிட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video