இலங்கை
Trending

தலவத்துகொட கொள்ளை தொடர்பாக நால்வரைத் தேடும் பொலிஸார்!

தலவத்துகொட பகுதியிலுள்ள விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா சேவை வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று(01)பிற்பகல் குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த நால்வர், நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர்.

வெள்ளை நிற காரில் வந்த குறித்த நபர்கள் முகங்களை மூடியிருந்த்தோடு, சம்பவத்தைத் தொடர்ந்து அதே காரில் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

கொள்ளைச் சம்பவத்தின்போது சந்தேகள நபர்கள் ஊழியர் ஒருவரைத் தாக்கிய காட்சிகளும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நிறுவனத்தில் இருந்த சுமார் 6 கோடி ரூபாய் பணத்தோடு, நிறுவன உரிமையாளர் அணிந்திருந்த நான்கு தங்கச் சங்கிலிகள் மற்றும் மூன்று தங்க மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button