உலகம்
Trending

நாட்டில் மின்வெட்டை தவிர்ப்பதற்கான உபாயங்களை ஆராய்கிறது ஈரான்!

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைத் தொடர்ந்து, நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஈரான் ஆராய்ந்து வருகிறது.

சில மின் உற்பத்தி நிலையங்களால், கைத்தொழில் துறைக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க முடியாமல் போயுள்ளதோடு, பொது மின் விநியோகக் கட்டமைப்பிலிருந்து அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக
அந்நாட்டு துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா ஆரிஃப் (Mohammad Reza Aref) தெரிவித்துள்ளார்.

எரிசக்தியை உகந்த முறையிலும் தகுந்த வகையிலும் பயன்படுத்துவதே எங்களது பொதுவான கலந்துரையாடலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிசக்தி உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் இருந்து எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு நாட்டு மக்களிடம் அந்நாட்டின் எண்ணெய் வள அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button