இலங்கைஉலகம்மங்கையர் அரங்கம்வடக்கு மாகாணம்
Trending

ஈழப் பெண்ணின் உலக சாதனை!

பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்ற, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா வாழ் தமிழரான குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் இலங்கையில் ஒரு பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் அரிய சாதனையை இவர் நிகழ்த்தவுள்ளார்.

குமுதினி கோபாலகிருஷ்ணனின்
நீண்ட கால விடாமுயற்சி
யின் பலனாக இந்த உலக சாதனை நிகழ்வு அரங்கேறுகிறது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி
மாலை 6 மணியளவில் திருமுறுகண்டி சிவனாயகம் மோகனதாஸ் இல்லத்தில் இந்த சாதனை நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை Guitar All Herbal Products நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான ஒரு கின்னஸ் சாதனை நிகழ்வை நேரடியாகப் பார்க்கும் பொன்னான வாய்ப்பு நம் மக்களுக்குக் கிடைத்துள்ளது.

பெண்மையின் பெருமை
இலங்கைப் பெண் ஒருவர் உலக அரங்கில் தடம் பதிக்கும் இந்த தருணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

உலகத்தையே வியக்க வைக்கப்போகும் இந்த சாதனை முயற்சிக்கு மங்கையர் அரங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button