இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

வயலின் வித்துவான் அமரர் லக்சுமிநாராயணாவின் பெயரில் வீதிக்கு பெயர்ப்பலகை நாட்டி வைப்பு!

வயலின் வித்துவான் அமரர் வி.லக்சுமிநாராயணாவின் சேவையைப் பாராட்டி அவரின் பெயரில் வீதிக்கான பெயர்ப் பலகை யாழ்.மருதனார்மடத்தில் இன்று (24) திரை நீக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மருதனார் மடத்திலுள்ள வட இலங்கை சங்கீத சபை கலாசார மண்டபத்தில் கெளரவுப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன்,

உடுவில் பிரதேச செயலர் பொ.பிரேமினி, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் தர்சினி ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்வில், இராமநாதன் நுண்கலைப்பீட மாணவிகளின் சிறப்பு நடனமும் இடம்பெற்றது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button