
யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை AB21 வீதிப் புனரமைப்பு பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன .



இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650 கிலோமீற்றரிலிருந்து 1.670 கிலோ மீற்றர் வரையும், 11.970 கிலோ மீற்றரில் இருந்து 14.420 கிலோ மீற்றர் வரையுமாக 3.47 கிலோ மீற்றர் வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



இதற்காக 260.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



இதற்கான ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் சுந்தரலிங்கம் கபிலன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Follow Us

![[17:45, 11/06/2026] VJ Dreams Creation: ... [17:45, 11/06/2026] VJ Creations Rajani Anna: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/06/WhatsApp-Image-2026-06-11-at-17.45.22-390x220.jpeg)

