மேல்மாகாணம்
Trending

300

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை திருத்தம்” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கோ அல்லது அதன் எந்தவொரு பகுதிக்கும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கீகாரம் பெற வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும், 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சொற்றொடர்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும், சட்டம் நடைமுறைக்கு வரும் போது பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் நபருக்கு ஆறு வருட பதவிக்கால வரம்பு பொருந்தாது என்ற ஏற்பாட்டை சேர்க்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, “நீதித்துறை திருத்த” சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல எனவும், அதனை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button