உலகம்
Trending

செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் யேமன் அரசாங்கம், செங்கடல் கரையோரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பொப் அல்-மந்தப் நீரிணை முதல் மொக்கா நகரம் வரையிலான பகுதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதே இதன் நோக்கம் எனவும் யேமன் அரச படைகள் தெரிவித்துள்ளன.

இந்த இராணுவ நடவடிக்கையின் போது செங்கடல் கரையோரப் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்துள்ளதாக யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரியாத்திலுள்ள “கிங் காலித்” சர்வதேச விமான நிலையம், ராபிக் பகுதியிலுள்ள “அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அப்ஹா சர்வதேச விமானம் நிலையம் மற்றும் கமீஸ் முஷைத் இராணுவத் தளம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now