இலங்கை
Trending

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை!

‎தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அமுக்கம் நாளை(13) உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
‎
இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்ளும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


‎
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும். இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதோடு அந்தக் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now